தமிழினமே தலைகுனியுங்கள் ஒக்ரோபர் 25, 2007
Posted by செய்வதை திருத்தச் செய் in பத்திரிக்கை செய்தி.add a comment
அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதலில் உயிரிழந்த புலிகளின் உடல்களை நிர்வாணமாக்கி வேடிக்கை பொருளாக ஆக்கியுள்ளது. ஒவ்வொரு தமிழனும் தனக்குள்ளாவது ஏன் என்று கேட்காதவரை சிங்கள் அரசின் இத்தகுசெயல்கள் இனியும் தொடரத்தான் செய்யும் .
நன்றி: – புகைப்படம்: www.tamilwin.net
தமிழின் வெற்றி செய்திகள்: ஆடைகள் களைந்தமைக்கு இடதுசாரி முன்னணி கண்டனம்
கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்காவின் வன்குரூரம்: ஐ.நா.விடம் மின்னஞ்சல் மூலம் புலிகள் முறைப்பாடு |
கேர் ஆப் ப்ளாட்பாரம் ஒக்ரோபர் 16, 2007
Posted by செய்வதை திருத்தச் செய் in பத்திரிக்கை செய்தி.add a comment
நன்றி: ஆ.விகடன்
கேர் ஆப் ப்ளாட்பாரம்
சமீபகாலமாக ஆனந்தவிகடனில் வெளிவரும் தொடர் – ஆமாம் தொடர் என்றே சொல்ல வேண்டும். பரவலாக எல்லோராலும் கவனிக்கப்பட்ட ஒரு பகுதி இது. வேதனைபடும் அவர்களை வெளிச்சம் போட்டு காட்டியதால் ஒரு சிலர் உதவிக்கரம் நீட்டியதையும் ஆவி வெளியிட்டது.
ஆவிக்கு எனது சில கேள்விகள்.
1. கேர் ஆப் ப்ளாட்பாரத்தை விற்பனை ரீதியில் அனுகிய ஆவி, அவர்களுக்கு என்ன சன்மானம் வழங்கியது
2. இந்த தொடர் முடிவில் கண்டிப்பாக கேர் ஆப் ப்ளாட்பாரம் புத்தக வடிவில் இடம்பெறும். விற்பனையில் எத்தனை சதவிகிதம் கேர் ஆப் ப்ளாட்பாரத்தில் பங்குபெற்றவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
3. ஓ போடும் ஞாநி இதற்கு ஆம் போடுவாரா?
தோழமைக்கு வணக்கம் ஒக்ரோபர் 15, 2007
Posted by செய்வதை திருத்தச் செய் in வலைப்பக்கம்.add a comment
தோழமைக்கு வணக்கம் இணையத்தில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கிறேன். நான் யார் என்ற தேடலுடன் என்னுடைய பயணம் நீண்டு கொண்டிருப்பதால் இன்றுவரை என்னை நான் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இந்தவலைப்பக்கத்தின் பதிவுகள் அனைத்தும் சமூகம் சார்ந்த அக்கறையல்ல. என்மீதான அக்கறை. நான் படித்த பார்த்த என்னை பாதித்தவை பற்றிய பகிர்தல் இதன் மூலமாக என்னுடைய தேடலில் முழுமையடைந்து என்னை நான் அடையாளம் கண்டுகொள்ளகூடும் என்ற சுயநலமே.
இவண்
இனிமேல் பிறக்கக்கூடும்